அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை செயல்.. வீடியோ வெளியாகி வெடித்த சர்ச்சை !
அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை செயல்.. வீடியோ வெளியாகி வெடித்த சர்ச்சை !
அரசு பள்ளியில் ஆசிரியரின் அநாகரிக செயல் தொடர்பான வீடியோ வைரலாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் கதர்வா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை பாபிதா குமாரி என்பவர் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி பள்ளி வகுப்பறையில், நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஆசிரியை ஒருவர் தூங்குவதும், அவருக்கு மாணவி விசிறி கொண்டிருப்பதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவியை ஏதோ பணிப்பெண் போல நிறுத்தி வைத்து கொண்டு, ஆசிரியை சாவகாசமாக தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியை கொண்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் மிக வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. வகுப்பறையில் அனைத்து மாணவ, மாணவிகளும் தரையில் அமர வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் பாடம் நடத்தாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியைக்கு மற்றொரு மாணவி விசிறி கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஆசிரியை தன்னுடைய செயலை நியாயப்படுத்தி பேசினார். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் தான் நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன், என்றார். இது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியான நிலையில், அது வைரல் ஆகத் தொடங்கியது. மாணவ, மாணவிகளின் கல்வி குறித்து எந்தவித கவலையும் கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த அந்த ஆசிரியை குறித்து சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
newstm.in