சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!!

Update: 2022-05-19 12:07 GMT

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ. 1,015-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று உயர்த்தியுள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-ல் இருந்து ரூ.1,018 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளை சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2499லிருந்து ரூ.8 அதிகரித்து ரூ.2507க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News