கோர விபத்து! கார் மோதி 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நபர்!!

கோர விபத்து! கார் மோதி 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நபர்!!

Update: 2022-05-21 07:15 GMT

பெங்களூருவில் கார் மோதியதில் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பனசங்கரி அருகே வெளிவட்ட சாலையில் 4 பேர் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீது மோதி அருகில் நின்றிருந்த கார் மீது மோதியது.

கார் மோதிய வேகத்தில் ஒருவர் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்தனர்.

அதில் அவர் குடிபோதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்இந்த சம்பவம் அங்கிருந்த பல்பொருள் அங்காடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

newstm.in

Similar News