மீண்டும் கொரோனா.. சென்னை மக்கள் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை

மீண்டும் கொரோனா.. சென்னை மக்கள் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை

Update: 2022-05-24 16:46 GMT

மீண்டும் கொரோனா பரவலாம் என்பதால் சென்னை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கொரோனா மற்றும் காய்ச்சல் பரவுதல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகி வருகிறது.

தற்போது அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேபோல் சென்னையில் மக்கள் கவனக் குறைவாக இருப்பது தெரிகிறது. BA4 தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது என்றார்.

அதேபோல் குரங்கு அம்மை நோய் இந்தியாவில் இல்லை. இருந்தாலும் தொடர் கண்காணிப்பு செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் தேவைப்பட்டால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.  தற்போது டெங்கு தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது வரை 87 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை மண்டலத்தில் தொடர் கொரோனா தொற்று இருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய மாநகராட்சி, சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம். மக்கள் கவனக் குறைவாக இருக்க வேண்டாம், எனவும் கூறினார்.

 newstm.in

Similar News