மீண்டும் கொரோனா.. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைப்பு !!

மீண்டும் கொரோனா.. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைப்பு !!

Update: 2022-07-06 18:15 GMT

பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக கொரோனா தொற்று இருந்து வந்தது. அதன்பின்னர்  கடந்த சில காலமாக தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது கொரோனா தடுப்பூசி தான். உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு விரைவாக செலுத்தினர்.

அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் திட்டம், பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு கால இடைவெளி 9 மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சில நாட்களாக தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 
newstm.in
 

Tags:    

Similar News