முக்கியமான நேரத்தில் கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் !!
முக்கியமான நேரத்தில் கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் !!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. இதனால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதன் முதல்கட்டமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எளிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அண்மையில் நடந்த அதிமுக
பொதுக்குழு கூட்டம் முடிந்தபிறகு சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சாலை மார்க்கமாக சென்றார். அப்போது ஒவ்வொரு இடத்திலும் ஆதரவாளர்களை சந்தித்தார். பின்னர் சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in