தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி அடுத்து சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா!!

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி அடுத்து சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா!!

Update: 2022-06-29 05:30 GMT

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 8,970 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்ட 11 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து அரசு விரைவில் ஆலோசிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News