ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 196 ஆக அதிகரிப்பு..!
ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 196 ஆக அதிகரிப்பு..!
சென்னை ஐஐடியில் கடந்த 19-ம் தேதி மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என 7 ஆயிரத்து 300 பேரின் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவுகள் தற்போது வரத் தொடங்கியுள்ளது. இதனால், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம், ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவுக்கு 141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.