சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா..!

Update: 2022-05-25 05:20 GMT

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில்தான் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா கண்டறியப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோய்த் தொற்று பரவிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக, சென்னை ஐஐடி மற்றும் சத்யசாய் தனியார் மருத்துவக் கல்லூரி ஆகிய மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News