டாக்டர் ராமதாஸுக்கு கொரானா தொற்று உறுதி..!!
டாக்டர் ராமதாஸுக்கு கொரானா தொற்று உறுதி..!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார். அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1. நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.#COVID19
— Dr S RAMADOSS (@drramadoss) July 13, 2022