பிரபல பாலிவுட் நடிகையான ஷபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.
இந்நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபலமான மூத்த நடிகை ஷபனா ஆஸ்மி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் விரைவில் நலம் பெறுங்கள் ஷபனாஜி என பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in