33 குழந்தைளுக்கு கொரோனா தொற்று.. 4வது அலை அச்சத்தில் மக்கள்..!

33 குழந்தைளுக்கு கொரோனா தொற்று.. 4வது அலை அச்சத்தில் மக்கள்..!

Update: 2022-04-20 05:10 GMT

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா 4வது அலை வந்து விட்டதோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 33 குழந்தைளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் நலமாக உள்ளனர். இது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ஆனால், கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று, புத் நகர் மாவட்ட கலெக்டர் வலியுறுத்தினார்.

Similar News