இந்தியாவில் மேலும் அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு !!

இந்தியாவில் மேலும் அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு !!

Update: 2022-04-30 09:38 GMT

நாடு முழுவதும் புதிதாக ஒரே நாளில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,30,72,176 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதையும் சேர்த்து கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்காக 17,801 பேர் சிகிச்சிசையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தைவிட 821 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த 2,496 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 622 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே நாளில் 22,80,743 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 188.65 கோடியை தாண்டியுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


newstm.in

Tags:    

Similar News