2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் விடை பெறுகிறது கொரோனா கட்டுப்பாடுகள்..!!
2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் விடை பெறுகிறது கொரோனா கட்டுப்பாடுகள்..!!
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று முதல் விலக்கிக் கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், எங்காவது பரவல் விகிதம் அதிகரித்தால் அதனை கண்காணித்து உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பலத்த உயிர்ச் சேதம், பெரும் பொருளாதார இழப்புகள் என மோசமான பாதிப்புகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சரிந்து விட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுகிறது. கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இன்றுடன் முடிகிறது.