அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. புதிதாக 2,701 பேர் பாதிப்பு..!
அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. புதிதாக 2,701 பேர் பாதிப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மீண்டும் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. நேற்று 1,881 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை அதிரடியாக 2,701 ஆக உயர்ந்தது.
42,018 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த அசுர வேக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, கடந்த 4 மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும்.
இதனால், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-ஐ நெருங்கி விட்டது. அதாவது 9,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மட்டும் 1,765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும் இன்று மாநிலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.