இளம் பெண்ணுக்கு அந்த இடத்தில் கொரோனா சோதனை.. லேப் டெக்னீசியன் பகீர் செயல் !!

இளம் பெண்ணுக்கு அந்த இடத்தில் கொரோனா சோதனை.. லேப் டெக்னீசியன் பகீர் செயல் !!

Update: 2022-02-04 17:15 GMT

கொரோனா சோதனை என்று பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து மாதிரியை சேகரித்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு வணிக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு ஒரு தனியார் லேப்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளுக்கான மாதிரிகள் மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து மட்டுமே எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த லேப் டெக்னீசியன் பெண் பணியாளர் ஒருவரிடம் அத்துமீறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது, பெண்ணிடம் மேலும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களில் இருந்து மாதிரியை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இந்த சம்பவத்தை தனது சகோதரரிடம் தெரிவித்தார்.

பின்னர் அப்பெண்ணின் சகோதரர், தனக்கு தெரிந்த வேறு மருத்துவரிடம் சென்று விசாரித்துள்ளார். ஆனால், அதுபோன்று சோதனை எதுவும் தேவையில்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் தனியார் லேப் டெக்னீசியன் மீது பத்னேரா போலீசில் புகாரளித்தார். இதையடுத்து லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 12 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அனைத்து விசாரணையும் முடிந்து லேப் டெக்னீசியனை குற்றவாளி என்று கண்டறிந்து 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 


newstm.in

Similar News