இன்று முதல் 12 – 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!!
இன்று முதல் 12 – 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!!
12- 14 வயதுடைய சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி இன்று முதல் தமிழகம் முழுவதும் செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுகின்றன. ஒவ்வொருவரும் குறைந்தது 2 டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்படுவோர் கூடுதலாக பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூடுதலாக 2 டோஸ்கள் பூஸ்டர் வரை செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 15 முதல் 18 வயது வரை உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், தற்போது 12- 14 வயதுடையோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12- 14 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த வயதுடையோர் தாங்களாகவோ அல்லது பெற்றோர் துணையுடனோ கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
இன்று முதல் வரும் 25ஆம் தேதிக்குள் 12-14 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசியை பள்ளிகளிலேயே சென்று செலுத்தி முடிக்க அனைத்து மாவட்ட சுகாதார இயக்குநர்களுக்கும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
newstm.in