இன்று முதல் 6-12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி..!!

இன்று முதல் 6-12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி..!!

Update: 2022-04-28 05:20 GMT

நாடு கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வருகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல எழுச்சி பெறத்தொடங்கியது.

குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது. கேரளாவிலும் மறுபடியும் தொற்று அதிகரிக்கிற போக்கு காணப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கறது. இந்த தடுபபூசி 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கானது.

Similar News