சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.250 ஆக குறைப்பு !!
சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.250 ஆக குறைப்பு !!
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்தப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் இந்த தடுப்பூசியை இடம் பெறச்செய்வதற்கு பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தருணத்தில் இந்த தடுப்பூசியை பிற நாடுகள் அங்கீகரிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். இதன்படி தனியார் தடுப்பூசி மையங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி உட்பட, தனது கொரோனா தடுப்பூசியான கோர்பேவாக்சின் விலையை ரூ. 840 லிருந்து ரூ. 250 ஆகக் குறைத்துள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான பயாலஜிக்கல்-இ தெரிவித்துள்ளது. மேலும் வரிகளுடன் சேர்ந்து ரூ.400 என்ற விலையில் பயனாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in