பிரிட்டன் மகாராணிக்கு கொரோனா பாதிப்பு!!

பிரிட்டன் மகாராணிக்கு கொரோனா பாதிப்பு!!

Update: 2022-02-21 06:30 GMT

பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் தாயார் எலிசபெத்தை, இளவரசர் சார்லஸ் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தற்போது எலிசபெத்திற்கு தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியாக இந்த மாதத்துடன் எலிசபெத் 70ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். தற்போது அவருக்கு வயது 95.

மிக லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மகாராணி எலிசபெத், எளிதான பணிகளை மேற்கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மகாராணியின் உடல்நிலை குறித்த விபரங்கள் அறிவிக்கப்படாது. சமீபத்தில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

newstm.in

Similar News