இந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கட்டாயம்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
இந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கட்டாயம்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
பள்ளிகளில், மாணவர்களால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களை தடுக்க, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்ப்பதற்கு, பள்ளிகள் தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
அத்துடன், சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பது, பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது, மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை தனியாகக் கண்டறிந்து, அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.