நீதிமன்றம் அதிரடி! பெற்றோர் சொத்தில் பிள்ளைகளுக்கு உரிமை இல்லை!!

நீதிமன்றம் அதிரடி! பெற்றோர் சொத்தில் பிள்ளைகளுக்கு உரிமை இல்லை!!

Update: 2022-03-20 17:24 GMT

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது அவர்களின் சொத்தில் பிள்ளைகள் உரிமை கோர முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோனியா என்பவர் தாக்கல் செய்த மனுவில் தனது கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார் என்றும் சொத்துக்கு தன்னை சட்டபூர்வ பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். சோனியாவின் மகன் சொத்தில் தனக்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெற்றோருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளதாகவும் அவர்கள் உயிருடன் இருந்தாலும் வீட்டில் மகனுக்கு சட்ட உரிமை உள்ளது என்றும் வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள் இரண்டு வீடுகளிலும் ஒன்று தந்தை பெயரிலும் மற்றொன்று தாய் பெயரிலும் உள்ளது.

அவர்கள் உயிருடன் உள்ளவரை வீட்டில் மகன் உரிமை கோர முடியாது. பெற்றோர் இருக்கும் போதே பிள்ளை தனக்கு உரிமை உள்ளது என கூறுவது நகைப்புக்குரியது என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் தனது கணவர் பெயரில் உள்ள கூட்டுக் கணக்கை நிர்வகிக்க சோனியாவுக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் செலவழிக்கும் தொகை கணக்கு எடுக்க வேண்டும் என்றும்  தனிப்பட்ட செலவிற்கு அந்த பணத்தை செலவழிக்க கூடாது என்று கூறியுள்ளது. மேலும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வீட்டை விற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

Similar News