சிறுவனின் தொண்டைக்குள் சிக்கிய பாட்டில் மூடி!!
சிறுவனின் தொண்டைக்குள் சிக்கிய பாட்டில் மூடி!!
பள்ளி வகுப்பறையில் சிறுவனின் தொண்டைக்குழிக்குள் பாட்டில் மூடி ஒன்று சிக்கிக் கொள்ள, சமயோஜிதமாக செயல்பட்ட ஆசிரியை அவனை காப்பாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ராபர்ட் தண்ணீர் பாட்டில் மூடியை கைகளால் திறக்காமல் தனது வாயைப் பயன்படுத்தி திறந்துள்ளான்.
அப்போது அவன் தொண்டைக்குழியில் பாட்டில் மூடி சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவனால் பாட்டில் மூடியை தொண்டையிலிருந்து வெளியேற்ற முடியவில்லை.
மூடி சிக்கியதால் பேச முடியாமல் சைகை காட்டத் தொடங்கினான். தொடர்ந்து தனது ஆசிரியை ஜானிஸ் ஜென்கின்ஸிடம் ஓடினான். இதனையடுத்து அவனது ஆசிரியை சிறுவன் வாயிலிருந்து பாட்டில் மூடியை வெளியே தள்ள முதலுதவி செய்தார்.
இதனையடுத்து முதலுதவி நுட்பம் சரியாக வேலை செய்யவே மூடியை சிறுவன் துப்பிவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினான். ஆசிரியை ஒருவரின் வீரச் செயலை காட்டும் வியத்தகு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐந்து வருடங்களாக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஜானிஸ் ஜென்கின்ஸ் உயிர் காக்கும் அடிப்படை முதலுதவியில் பயிற்சி பெற்றவர்.
newstm.in