தஞ்சாவூரில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.. அமைச்சர் அறிவிப்பு

தஞ்சாவூரில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.. அமைச்சர் அறிவிப்பு

Update: 2022-04-18 20:00 GMT

திருவோணம் வருவாய் வட்டம் புதியதாக உருவாக்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து ரூ 7.56 கோடியில் திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும். தஞ்சை மாவட்டங்களில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் நிரப்பப்படும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார்.

கடலூர் விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் சுமார் 3,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் நரசிங்கராயன்பேட்டையில் அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 274 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் பேசினார். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்தார்.

திருவோணத்தை தலைமையாக கொண்டு வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், தற்போது  திருவோணம் வருவாய் வட்டம் புதியதாக உருவாக்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

newstm.in

Similar News