#BREAKING :- அரசுக்கு கடும் நெருக்கடி.. பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர்..!

#BREAKING :- அரசுக்கு கடும் நெருக்கடி.. பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர்..!

Update: 2022-06-22 14:15 GMT

மகாராஷ்டிராவில் தொடர்ந்து நீடித்து வரும் அரசியல் குழப்பங்களால் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, முதல்வர் உத்தவ் தாக்கரே முன்வந்து ராஜினாமா செய்துவிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்தில், மகாராஷ்டிராவில் நடந்த மேலவைத் தேர்தலில் பாஜகவின் 5 எம்எல்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில், சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி பாஜக 5 எம்எல்சி இடங்களை பிடித்து இருக்க முடியாது என்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில் கட்சி கொறடாவாகவும், அமைச்சராகவும் உள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே திடீரென அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர், 35-க்கும் மேற்பட்ட ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.

இதனால், உத்தவ் தாக்கரே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்று மதியம் நடக்க உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைக்க உத்தவ் தாக்கரே பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News