எகிறப் போகும் கச்சா எண்ணெய் விலை!!

எகிறப் போகும் கச்சா எண்ணெய் விலை!!

Update: 2022-06-07 10:18 GMT

சவுதி அரேபியா ஜூலை மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலையினை அதிகரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. சவுதி அதன் அதிகாரப்பூர்வ விலையை ஆசிய நாடுகளுக்கு (official selling price ) 6.50 டாலர்கள் அதிகரித்துள்ளது.

இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். சவுதியின் முடிவால் இந்தியாவுக்கு நிச்சயம் பிரச்னை ஏற்படும். காரணம், இந்தியா சவுதியிடம் இருந்து கணிசமான எண்ணெய் வாங்கி வருகிறது.

மேலும் சவுதியினை தொடந்து மற்ற நாடுகளும் விலையை அதிகரிக்க முற்படலாம். இதன் காரணமாக அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் அதன் தாக்கம் இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் இன்னும் உச்சம் தொடலாம், இதன் காராணமாக ரூபாயின் மதிப்பானது இன்னும் மோசமான நிலையை எட்டலாம். இது இந்தியாவில் பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம், பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க தூண்டலாம் என்பதால் பெரும் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது.

newstm.in

Similar News