கரடி வளையத்துக்குள் குழந்தையை வீசிய கொடூர தாய் ! - கதிகலங்க வைக்கும் வீடியோ !
கரடி வளையத்துக்குள் குழந்தையை வீசிய கொடூர தாய் ! - கதிகலங்க வைக்கும் வீடியோ !
குழந்தையை பெற்ற தாயே கரடி கூண்டுக்குள் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் உள்ளது மிகவும் பிரபலமான தாஷ்கன்ட் வன உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் பல்வேறு வகையான உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தப் பூங்காவிற்கு உள்ளுர், வெளிநாடு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் காணப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வன உயிரியல் பூங்காவில் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள கரடிகள் இருக்கும் வளையத்தின் வெளியே நின்றபடி பலரும் கரடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் அங்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, வளையத்துக்கு வெளியே நின்று கரடியை பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென தனது பெண் குழந்தையை தூக்கு கரடி வளையத்துக்குள் வீசிவிடுகிறார்.
குழந்தையை வீசிவிட்டு அப்பெண் எவ்வித பதற்றமும் இல்லாமல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். எனினும் அவரை பொதுமக்கள் சுற்றி வளைக்க, பூங்கா ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.
ஆனால் நல் வாய்ப்பாக கரடி குழந்தையை நெருங்கவில்லை. பூங்கா ஊழியர்கள் கூட்டமாக கரடி வளையத்திற்குள் சென்று குழந்தையை பாதுகாப்புடன் மீட்டு வருகின்றனர். எனினும் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த கொடூரத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.
VIEWER DISCRETION IS ADVISED!
— Press TV (@PressTV) February 1, 2022
CCTV footage shows a woman throwing her daughter into a bear's enclosure in Uzbekistan's Tashkent Zoo.
The toddler was not harmed by the bear, but she was hospitalized with injuries due to the fall.
The woman’s motivation has remained unclear. pic.twitter.com/R5c4aDzSFA
newstm.in