கிரிப்டோகரன்சி வருமானத்திற்கு 30% வரிவிதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் அதில் வரி ஏய்ப்பு செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைப் போல் இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்து காரணமாக தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை அறிவிக்கவும், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கிரிப்ட்டோகரன்சியை ஒழுங்குப்படுத்த சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அத்துடன் கிரிப்ட்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் சில அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றன.
மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து. அதுமட்டுமல்லாமல் கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மற்ற வருமானங்களில் கிடைக்கப் பெறும் சலுகையை பயன்படுத்தி இதில் பெறப்படும் வருமானத்துக்கு வரி விலக்கு பெற முடியாது. எனவே வரி ஏய்ப்பு செய்தால் ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை அதிகமாக இருந்தால் அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மை, அளவைப் பொறுத்து, அபராதம் 200 சதவிகிதம் வரை கூட விதிக்கப்பட வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in