உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா..?: வெளியானது பரபரப்பு தகவல்..!
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா..?: வெளியானது பரபரப்பு தகவல்..!
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதன் விளைவாக தற்போது, கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டன.
அதோடு, மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகவே மாநில அரசு ஊரடங்கை ரத்து செய்துள்ளது என பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.