முடிவுக்கு வந்தது ஊரடங்கு கட்டுப்பாடு.. அரசு அதிரடி அறிவிப்பு..!
முடிவுக்கு வந்தது ஊரடங்கு கட்டுப்பாடு.. அரசு அதிரடி அறிவிப்பு..!
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிய நிலையில், ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி இருந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் நீக்கி வருகின்றன.
இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இன்று (11ம் தேதி) முதல், இரவு 12.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இருந்த இரவுநேர ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது என சண்டிகர் அரசு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், மார்க்கெட்கள், திரையரங்குகள், மால்கள், ஹோட்டல்கள், பார்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வரும் 14ம் தேதி முதல் சுழற்சி முறையில், முழு திறனுடன் மீண்டும் திறக்கப்படும். சண்டிகர் பறவை பூங்கா மற்றும் ராக் கார்டன் நாளை (12ம் தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.