ஆர்வம்.. குடையுடன் சென்று வாக்களித்த மக்கள் !!

ஆர்வம்.. குடையுடன் சென்று வாக்களித்த மக்கள் !!

Update: 2022-02-19 09:04 GMT

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தப்போதும், அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.

திருவாரூரில் காலை முதல் மழை பெய்து வருவதால் ஓட்டு போட வந்த பொதுமக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மழையில் நனையாதப்படி வாக்காளர்களை நிற்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அதிகமானோர் வந்ததால், அவர்கள் தாங்கள் கையோடு எடுத்துவந்திருந்த குடையை பிடித்தவாறு வாக்களிக்க காத்திருந்தனர்.

திருவாரூர் நகராட்சியை பொறுத்தவரை 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் 23 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்கள், 26 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 27 ஆண் வாக்குச்சாவடிகள், 27 பெண் வாக்குச்சாவடிகள், 3 பொது வாக்குச்சாவடிகள் என 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.


newstm.in

  

Similar News