சென்னை உள்ளிபட தமிழகம் முழுவதும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்துவிட்டது. வீட்டில் இருந்தே பிடித்த உணவு, நொறுக்குத்தீனிகளை ஆர்டர் செய்து பெற்றுகொள்ளலாம். ஆனால் இதில் ஒருசில நேரங்களில் தவறு நடப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

அந்த வகையில் சென்னையில் ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு கெட்டுப்போன பிரியாணி, சிக்கன் லாலிபாப் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணி, சிக்கன் லாலிபாப் கெட்டுப்போய் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே உணவுடன் தொடர்புடைய ஹோட்டலுக்கு நேரில் சென்று வாடிக்கையாளர் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, உணவு கெட்டுபோனதை ஹோட்டல் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. 

எனினும் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாடிக்கையாளர் புகார் அளித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இது தொடர்பாக கலவையான கருத்துகள், விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 

newstm.in