வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்!!
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!! பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்!!
மதுரையில் ரொம்ப பிரபலம் மதுரை பன் பரோட்டாவும் இதற்கு காம்பினேஷனாக கொடுக்கும் நாட்டுக் கோழி கிரேவியும்.
இந்நிலையில், சுகாதாரமற்ற முறையில் பரோட்டா மற்றும் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ததாக மதுரையில் உள்ள பிரபல பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் பிரபல பன் பரோட்டா கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பரோட்டா சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில், இங்கு சுகாதாரமற்ற முறையில் பரோட்டா மற்றும் உணவுகளை தயாரித்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினார்கள். அப்போது பன் பரோட்டா கடையில் சுகாதாரமற்ற முறையில் ரோட்டில் உணவுகள் தயாரித்து விற்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரமற்ற முறையில் பரோட்டா மற்றும் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ததாக உணவுபாதுகாப்புத்துறையினர் கடைக்கு சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பகுதியில், பெட்டிக்கடை நடத்துவதற்காக அனுமதி பெற்று பன் பரோட்டா கடை நடத்தி வந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்து இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்டுவந்த நிலையில் உணவுபாதுகாப்புத்துறை அளித்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.