இளங்கலை படிப்பிற்கு 'க்யூட்' நுழைவு தேர்வு.. யுஜிசி புதிய உத்தரவு

இளங்கலை படிப்பிற்கு 'க்யூட்' நுழைவு தேர்வு.. யுஜிசி புதிய உத்தரவு

Update: 2022-03-22 07:47 GMT

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய பல்கலைக்கழக மானிய குழுவான, 'யு.ஜி.சி.,' தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, யு.ஜி.சி., 45 மத்திய பல்கலைகளுக்கு மானிய உதவி வழங்குகிறது. இப்பல்கலைகளில் வரும், 2022 - 23Mம் கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர 'கியூட்' எனும் பொது நுழைவுத் தேர்வு அறிமுகமாகிறது. இத்தேர்வு, பிளஸ் 2 பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இதில் பிரிவுகள் ஏ, பி, மற்றும் பொது தேர்வு இருக்கும்.


அடுத்து தாங்கள் எடுத்து படிக்க வேண்டிய பாடங்களுக்கான தேர்வு இருக்கும். முதல் பிரிவில், தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட, 13 மொழிகளில் தேர்வு எழுதலாம். இது கட்டாய தேர்வு. இவை இல்லாமல், பிரெஞ்சு, ஜெர்மன், அரபு மொழிகளில் தேர்வு எழுத விரும்புவோர் பி பிரிவை தேர்வு செய்யலாம். மூன்றாவதாக ஒரு மாணவர், அதிகபட்சமாக ஆறு பாடங்களில் தேர்வு எழுதலாம்.

தேர்வு இரு பகுதிகளாக நடக்கும். காலையில் ஒரு மொழி, இரு பாடங்கள் சார்ந்த தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடக்கும். மாலையில் பி பிரிவு மற்றும் எஞ்சிய நான்கு களம் சார்ந்த பாடங்களுக்கான தேர்வு நடக்கும்.

இத்தேர்வால் இட ஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் நேராது. மாநில பல்கலைகள், தனியார் பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள் ஆகியவை விரும்பினால் க்யூட் தேர்வில் இணையலாம். ஒரே தேர்வு என்பதால் மாணவர்களுக்கும், நிதிச் சுமை குறையும் என்பதால் பெற்றோர்களுக்கும் இத்திட்டம் பயனளிக்கும், என அவர் பேசினார்.

newstm.in

Tags:    

Similar News