வெடித்து சிதறிய சிலிண்டர்.. ஹோட்டலில் இருந்த 13 பேர் படுகாயம் !!

வெடித்து சிதறிய சிலிண்டர்.. ஹோட்டலில் இருந்த 13 பேர் படுகாயம் !!

Update: 2022-04-15 09:00 GMT

ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா பகுதியில் ஏராளமான கடைகள் நெருக்கமாக உள்ளன. மேலும் பிரபலமான உணவு நிறுவனங்களும் அங்கு செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடை வீதி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நிலையில், அங்குள்ள துரித உணவகத்தில் திடீரென சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உணவகத்தின் ஒருபகுதி வெடித்து சிதறியதில். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதித்தனர். மேலும், சிலிண்டர் வெடித்ததில் கடை முற்றிலும் எரிந்துள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 


இதனிடையே, டெல்லி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் 43℃ க்கும் அதிகமாக வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் சமீப நாட்களாக தொடர்ச்சியாக தீ விபத்து அதிகரித்து வருகிறது என தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கான காரணம், ஒரு சில தீ விபத்துக்கள் ஏசி உள்ளிட்ட உயர் மின் அழுத்த பொருட்களின் தொடர் இயக்கம் காரணமாகவும், மற்ற தீ விபத்துக்கள் சிலிண்டர் வெடித்தும் ஏற்படுகிறது.

ஜாமியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் எனவும் சிலருக்கு 30% தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

 
newstm.in
 

Tags:    

Similar News