அரசு ஊழியர்களுக்கு செக்.. அடுத்த மாதம் 2 நாள் சம்பளம் பிடித்தம்..!

அரசு ஊழியர்களுக்கு செக்.. அடுத்த மாதம் 2 நாள் சம்பளம் பிடித்தம்..!

Update: 2022-03-31 16:20 GMT

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பஸ் தொழிலாளர்கள் கடந்த 28-ம் தேதி ஸ்டிரைக்கில் தீவிரமாக ஈடுபட்டனர். 29-ம் தேதி பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்தது. அதையும் பொருட்படுத்தாமல் தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த மாதத்திற்கான சம்பளம் மார்ச் 20-ம் தேதிக்குள் கணக்கிடப்படுவதால் அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மாநகர பஸ் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும் போது, ‘சென்னையில் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் 90 சதவீதம் பேரும், 2-வது நாள் வேலை நிறுத்தத்தில் 26 சதவீதம் பேரும் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் பணிக்கு வந்த விவரங்கள், வராதவர்களின் பட்டியல் 32 கிளைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அரசின் உத்தரவை பின்பற்றி வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்த நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்படும்’ என்றனர்.

Similar News