திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று!!

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று!!

Update: 2022-06-21 09:24 GMT

திமுக எம்.பியும், கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மூன்று அலைகளால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4ஆவது அலை பரவுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

தற்போது 4ஆவது அலையில் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுகின்றனர். அண்மையில் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு தொற்று உறுதியானது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தற்போது, 2ஆவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

newstm.in

Similar News