திமுக எம்.பி திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி !

திமுக எம்.பி திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி !

Update: 2022-07-22 09:40 GMT

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் உள்ளனர். திமுக எம்.பி திருச்சி சிவாவும் டெல்லியில் இருக்கிறார். இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் திமுக எம்.பி திருச்சி சிவா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் மாநிலங்களவை எம்பியான திருச்சி சிவா, 1996, 2002, 2007,2014 மற்றும் 2020 என ஐந்து முறை  நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் பணியாற்றிவருகிறார். கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதோடு, மத்திய மண்டலத்தில் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்து வருகிறார். 

newstm.in
 

Similar News