டாஸ்மாக் கடையை மூட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் வலியுறுத்தல்!!
டாஸ்மாக் கடையை மூட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் வலியுறுத்தல்!!
புனித வெள்ளி தினத்தில் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிடும்படி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இயேசுவை சிலுவையில் அறைந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழா புனித வெள்ளி.
புனித வெள்ளி இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் அன்றைய தினம் டாஸ்மாக் கடையை மூட பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், புனித வெள்ளி வரும் ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதாகவும், இந்நாளில் கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பிருந்தும், ரத்த தானம் செய்தும் இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.
எனவே, இயேசுவின் மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் என சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
newstm.in