திமுக வேட்பாளர் திடீர் மரணம்.. கட்சியினர் இரங்கல்!

திமுக வேட்பாளர் திடீர் மரணம்.. கட்சியினர் இரங்கல்!

Update: 2022-02-14 11:23 GMT

ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிய 4 நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகரிலுள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியின் 2-வது வார்டில் திமுக சார்பில் முத்தையா என்பவர் போட்டியிடுகிறார். தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முத்தையா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.திமுக வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News