திமுக கொடி கட்டிய காரில் கடத்தல் – 3 பேர் கைது!!

திமுக கொடி கட்டிய காரில் கடத்தல் – 3 பேர் கைது!!

Update: 2022-03-23 07:18 GMT

திமுக கொடியுடன் வந்த காரில் கடத்திவரப்பட்ட 2.5 கிலோ திமிங்கல எச்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் - சிவகங்கை சாலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திமுக கொடியுடன் கார் ஒன்று வந்தது.

அதனை மடக்கி அதனை சோதனையிட்டதில் காரின் உள்ளே திமிங்கல எச்சம் 2.5கிலோ இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் உறவினரான லிங்கவாடியைச் சேர்ந்த அழகு, பழனிசாமி, குமார் ஆகிய 3 பேரையும் மேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காரில் கடத்திவரப்பட்ட திமிங்கல எச்சம் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனத்துறையினரிடம் திமிங்கல எச்சம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடத்தபட்ட திமிங்கல எச்சம் சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்த எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

newstm.in

Similar News