கூட்டணி இடத்தில் திமுகவினர் போட்டி.. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

கூட்டணி இடத்தில் திமுகவினர் போட்டி.. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

Update: 2022-03-04 18:24 GMT

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் (2-ம் தேதி) பதவி ஏற்றனர்.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இது குறித்து, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News