திமுக கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை.. 3 பேருக்கு போலீஸ் வலை..!

திமுக கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை.. 3 பேருக்கு போலீஸ் வலை..!

Update: 2022-07-13 12:35 GMT

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாராஜா புரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி மரிய நிர்மலா தேவி.

இவர், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலராக சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். பின்னர் திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில், சரவணகுமார் இன்று காலை 8 மணி அளவில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், சரவணகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே சரவணகுமார் இறந்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் குரும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

Similar News