வேட்பாளரின் கணவர் கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி!!

வேட்பாளரின் கணவர் கன்னத்தில் அறைந்த திமுக நிர்வாகி!!

Update: 2022-02-05 17:58 GMT

சிவகாசியில் பெண் வேட்பாளரின் கணவர் கன்னத்தில் திமுக நகர பொறுப்பாளர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து வேட்புமனு பரிசீலனை தீவிரமாக நடைபெற்றது.

புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் .தி.மு., தி.மு., கம்யூனிஸ்ட் கட்சி, விஜய் மக்கள் இயக்கம், பா.., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் என சுமார் 322 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வேட்புமனு பரிசீலனைக்கு அதிமுகவினர் அதிகமாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்றுள்ளதாகவும் தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் தி.மு.கவினர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வாக்குவாதம் நீடித்த நிலையில் திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் 20ஆவது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளரின்  கணவர் கருப்பசாமியை காவல்துறையினர் முன்னிலையில் அறைந்தார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Full View

உதயசூரியன் பேசிக் கொண்டிருக்கும் போது கருப்பசாமி இடையே பேசியதால், அறைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுபோல் நடந்து கொள்வது அநாகரிகம் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News