திமுக பெண் எம்எல்ஏ-வுக்கு மிரட்டல்.. ஓட்டுநர் கைது !

திமுக பெண் எம்எல்ஏ-வுக்கு மிரட்டல்.. ஓட்டுநர் கைது !

Update: 2022-07-23 08:32 GMT

குடியாத்தம் பெண் எம்எல்ஏவை செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த அமுலு விஜயன் உள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் இரவில் செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதில் பேசியபோது, எதிர் முனையில் பேசிய நபர், பெண் எம்எல்ஏவிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர இணைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து ஆபாச பேச்சு, மிரட்டல் தொடர்பாக எம்எல்ஏவின் கணவர் விஜயன் உம்ராபாத் போலீசில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்தனர். அதில், எம்எல்ஏவை போனில் மிரட்டல் விடுத்த நபர் ஆம்பூர் அருகே உம்ராபாத்  அடுத்த நரியம்பட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான கதிரவன் (40) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

Similar News