ஓபிஎஸ் பின்னால் திமுக இருக்கு.. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு..!
ஓபிஎஸ் பின்னால் திமுக இருக்கு.. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு..!
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என தனித்தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “வருகின்ற 11-ம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
அதிமுகவுக்கு துரோகம் செய்யும் ஓபிஎஸ்-க்கு பின்னால் இருந்து திமுக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்பட்டாலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.