அதிக வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!!

அதிக வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!!

Update: 2022-05-29 07:34 GMT

2020-21ஆம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சிகளில் தி.மு.. முதலிடத்தை பிடித்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.529.41 கோடி. இதில் திமுகவின் வருவாய் ரூ.149.95 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த படியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.107.99 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒடிஷாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தளம், கடந்த ஆண்டு ரூ.73 கோடி வருமானத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில், மொத்தம் ரூ.414.02 கோடியை கட்சிகள் செலவாக அறிவித்து உள்ளன. அதில் திமுகவின் செலவு ரூ.218.49 கோடி.

தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.76 கோடி, அதிமுக ரூ.42.36 கோடி செலவு செய்ததாக அறிவித்துள்ளன. வருமானத்திற்கான 47.34 சதவீதம் ஆதாரம் தேர்தல் பத்திரங்கள் என 31 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

தமிழ் நாட்டில் தி.மு. ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.64.90 கோடி ஆக இருந்தது. இது, கடந்தாண்டில் 131 சதவீதம் உயர்ந்து, 149.95 கோடி ரூபாயாக உள்ளது.

.தி.மு. ரூ.34 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்த 2019 - 2020ல், ரூ.89 கோடி வருமானம் ஈட்டியது. .தி.மு., பா.. ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் ரூ.1.50 கோடியாக இருந்த .தி.மு.கவின் வருமானம் 2020ல் ரூ.2.86 கோடியாக உயர்ந்துள்ளது. பா..கவின் வருமானம் ரூ.55.60 லட்சத்தில் இருந்து ரூ.1.16 கோடி ஆக உயர்ந்துள்ளது.

newstm.in

Similar News