“மாநில உரிமைகளை காக்க திமுக துணை நிற்கும்” : மு.க.ஸ்டாலின் உறுதி!!
“மாநில உரிமைகளை காக்க திமுக துணை நிற்கும்” : மு.க.ஸ்டாலின் உறுதி!!
மாநில உரிமைகளைக் காக்க தி.மு.க எப்போதும் துணை நிற்கும் என மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து மேற்கு வங்க முதல்வர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பகிர்ந்து கொண்டார்.
எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டவும் அவர் பரிந்துரைத்தார். மாநில உரிமைகளைக் காக்க தி.மு.க எப்போதும் துணை நிற்கும். விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
Beloved Didi @MamataOfficial telephoned me to share her concern and anguish on the Constitutional overstepping and brazen misuse of power by the Governors of non-BJP ruled states. She suggested for a meeting of Opposition CMs. (1/2)
— M.K.Stalin (@mkstalin) February 13, 2022
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஜக்தீப் தங்கர் முடக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட மேற்குவங்க அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், "அரசியலமைப்புச் சட்டத்தின் 174 வது பிரிவின் பிரிவு (a) ன் உட்பிரிவு (2) மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தைப் பிப்ரவரி 12, 2022 முதல் முடக்குகிறேன்" என ஆளுர் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
newstm.in