டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : இன்று முக்கிய அறிவிப்பு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : இன்று முக்கிய அறிவிப்பு!!

Update: 2022-02-18 06:30 GMT

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் குரூப்-2 தேர்வுகளுக்கான தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 -வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியிருந்தார்

இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். குரூப் 2 தேர்வை எழுத உள்ளோர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதே போல், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்க பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News