டிஎன்பிஎஸ்சி தமிழ் வழி இடஒதுக்கீட்டில் முறைகேடு!?

டிஎன்பிஎஸ்சி தமிழ் வழி இடஒதுக்கீட்டில் முறைகேடு!?

Update: 2022-06-07 06:30 GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக ஆரணியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 21ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற்றதுதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் 2664 பட்டதாரிகள் 9 மையங்களில்  இத்தேர்வினை எழுதினர்.

2010ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20%  இட ஓதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்

மேலும் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் போட்டி தேர்வாளர்களூக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடந்த தேர்வில், தமிழ் வழி இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர் என டிஎன்பிஎஸ்சியால் குறிப்பிடப்பட்ட  சுமார் 75 ஆயிரம் நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ்மொழி இட ஒதுக்கீட்டை கோரியுள்ள பட்டத்தாரிகள் கூறுகையில்,  ஒரு தேர்வர் 1ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை தமிழ் வழியிலும் மேலும் முதல் பட்டப்படிப்பும் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழ் வழி இட ஒதுக்கீடுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

ஆனால்  தற்போது நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2  தேர்வில்  1ஆம் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து முதல் பட்டப்படிப்பை ஆங்கில வழிக் கல்வியாக படித்து மீண்டும் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் தமிழில் படித்த மாணவர்களுக்கு தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர்.

இதனால் தமிழ்வழி கல்வி படித்த தகுதியுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின்  இதில் தலையிட்டு 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்.

newstm.in

Similar News